பிடல் காஸ்ட்ரோ வின் கட்டுப்பாட்டில் இருந்து கியூபா விடுதலை பெற வேண்டும் என
அமெரிக்கா அரசு செயலாளர் ஹிலாரி கிளிண்டன் கருத்து வெளியிட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டன்னில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போதே
அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்:
“கியூபா விசயத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா என்ன நிலைப்பாட்டைக்
கொண்டிருந்ததோ அதையே தற்போதும் கொண்டுள்ளது. இதில் எவ்வித மாற்றமும் இல்லை. பிடல்
காஸ்ட்ரோவின் பிடியில் இருந்து கியூபா விடுதலை பெற வேண்டும் என்பதே அமெரிக்காவின்
விருப்பம்.
அங்கு ஜனநாயகம் மலர வேண்டும் என்று நினைக்கிறோம். அங்கு யாரெல்லாம் நேர்மறையான
சீர்திருத்தம் அவசியம் என்று கருதுகிறார்களோ அவர்களுக்கு முழு ஆதரவை அளிக்க
அமெரிக்கா தயாராவே உள்ளது. கியூபா மக்கள் தங்களது எதிர்காலத்தை
நிர்ணயித்துக்கொள்வதை அமெரிக்கா ஆதரிக்கும். இதுகுறித்து அந்நாட்டில் தனி
நபர்களிடமும், குழுக்களிடமும் அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. கியூபாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே உணவு, மருந்துப் பொருள்கள் வழங்குதல் உள்ளிட்ட
மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறோம். இந்த உதவி வரும் காலத்திலும் தொடரும்”
என்றார் ஹிலாரி.
ஒருகாலத்தில் அமெரிக்கா சொல்வதை அப்படியே கேட்டு நடக்கும் நாடாக இருந்தது
கியூபா. ஆனால் பிடல் காஸ்ட்ரோ அந்நாட்டின் பிரதமராகப் பதவி ஏற்றதும் கியூபாவின்
போக்கு மாறியது. அமெரிக்காவின் கட்டளைக்கு அடிபணியாத நாடாக மாறியது. 1959-1976 வரை
பிடல் காஸ்ட்ரோ பிரதமராக இருந்த போதும், 1976-2008-வரை குடியரசுத் தலைவராக இருந்த போதும்
அமெரிக்காவுக்கு அடிபணியவில்லைகாஸ்ட்ரோ .
பின்னர் 2008 இல் உடல்நிலை காரணமாக அதிபர் பதவியில் இருந்து விலகிய பிடல்,
தனது சகோதரர் ரோல் காஸ்ட்ரோவிடம் பொறுப்பை ஒப்படைத்தார். எனினும் இவரும் அமெரிக்காவிற்கு எதிராக கடும்போக்குக் கொள்கையை கடைப்பிடித்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது

super
ReplyDelete